.webp)
-558569.jpg)
Colombo (News 1st) இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்அனுப்பியுள்ளார். இ
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு படகும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவனத்துக்கு கொண்டு வருவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இயந்திர கோளாறால் படகு நெடுந்தீவு கரையை ஒட்டி - தரைதட்டி நின்ற நிலையில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாக கூறி படகுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமையானது மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து பாக்குநீரிணையை நம்பி வாழும் மீனவர்களின் மத்தியி்ல் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, உரிய தூதரக வழிமுறைகள் ஊடாக இலங்கை அரசுடன் கலந்துரையாடி ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட அனைத்து இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விரைவாக விடுவித்து அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென முதல்வர் விஜய் இந்திய வௌிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூட்டு செயற்பாட்டுக்குழு மூலம் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மாத்திரமே இத்தகைய பிரச்சினைகள் மீண்டும் நிகழா வண்ணம் தீர்வு காண்பதற்கு உதவுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரம், நலன்களை பாதுகாக்க வௌிவிவகார அமைச்சர் என்ற வகையில் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்து தீர்வு காண வேண்டுமெனவும் தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
