டெங்கு ஒழிப்பிற்கு மெலத்தியனை பயன்படுத்த நடவடிக்கை

டெங்கு ஒழிப்பிற்கு 'மெலத்தியன்' திரவத்தை பயன்படுத்த நடவடிக்கை

by Staff Writer 05-08-2026 | 9:05 AM

Colombo (News 1st) நாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 'மெலத்தியன்'

(Malathion)

ஒழிப்பு திரவத்தைப் பயன்படுத்தும் பணிகள் இன்று (05) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுகாதார அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய அரசாங்கத்தினால் மெலத்தியன் திரவத் தொகுதி நேற்று(04) கையளிக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 86,947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு அபாயம் நிலவும் 137 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நுளம்பு ஒழிப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்