ஈரானுடன் இறுதி சந்திப்பிற்கு தயாராகும் அமெரிக்கா

ஈரானுடன் இறுதி சந்திப்பிற்கு தயாராகும் அமெரிக்கா

by Staff Writer 04-08-2026 | 9:03 AM

Colombo (News 1st) ஈரானுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரான் விடுத்த கோரிக்கை்கு அமைய, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்களிலிருந்து கட்டணங்களை அறவிடுவதற்கு ஈரானுக்கு வாய்ப்பு வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணையின் முழுமையான கட்டுப்பாடு தமது நாட்டிடமே காணப்படுவதாகவும் கட்டணங்களை அறவிடுவதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடும் நடவடிக்கைகளை அமெரிக்க படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு முயற்சித்த 9 வர்த்தகக் கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.