கிரேக்கத்தில் ஹெலிகொப்டர்கள் விபத்து: இருவர் பலி

கிரேக்கத்தில் ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

by Staff Writer 03-08-2026 | 10:17 AM

Colombo (News 1st) கிரேக்கத்தில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 ஹெலிகொப்டர்கள் விபத்திற்குள்ளாகியுள்ளன.

விபத்தில் விமானி, தீயணைப்பு வீரர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மற்றைய விமானத்தில் பயணித்த பிரித்தானிய விமானி மற்றும் கிரேக்க உதவியாளரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் ஏதென்ஸிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில்  பெல் ரக ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

கிரேக்கத்தில் சுமார் 72 மணித்தியாலங்களாக பரவிவரும் பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.