.webp)

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
