தரமற்ற தலைக்கவச விற்பனைக்கு எதிராக சட்டம்

தரமற்ற தலைக்கவச விற்பனைக்கு எதிராக நடவடிக்கை

by Staff Writer 02-08-2026 | 8:59 AM

Colombo (News 1st)  SLS தரச்சான்றிதழ் பொறிக்கப்படாத தரமற்ற தலைகவசங்களை விற்பனை செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

இலங்கை தரநிலைகள் நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனைகளின் போது அடையாளம் காணப்படுகிற தரமற்ற தலைக்கவசங்களின் விற்பனை மற்றும் தயாரிப்புக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

தரமற்ற தலைகவசங்கள் சந்தைகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்சியாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாக கொண்டு தரமான தலைகவசங்களை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் என்பன முக்கியமானதெனவும் தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.