மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை

மஹர சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களிடையே மோதல்

by Staff Writer 01-08-2026 | 7:11 PM

Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களிடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் போச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் F.U வுட்லர் தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு இடையில் இந்த அமைதியின்மை ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். 

அமைதியின்மையின் போது காயமடைந்த 05 கைதிகள் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனிடையே மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியில் தீ விபத்து ஒன்றும் பதிவாகியுள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்தார். 

கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நிற்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

நிலைமையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார கூறினார். 

சிறைச்சாலையின் வெளிப்புற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.