.webp)
-558147.jpg)
Colombo (News 1st) வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா நோக்கி பயணித்த வாகனமொன்று அதே திசையில் பயணித்த மோட்டார்சைக்கிளுடன் மோதியுள்ளது. அதன் பின்னர் விபத்துடன் தொடர்புடைய சாரதி வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
கனகராயன்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, புல்மோட்டை - திருகோணமலை வீதியில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தில் குச்சவௌியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்ததுடன் புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
