.webp)
-558122.jpg)
Colombo (News 1st) பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதல் பதக்கத்தை பரா மெய்வல்லுநர் பாலித்த பண்டார வென்றார்.
பரிதிவட்டம் எறிதலில் ஆடவருக்கான
F42-44 / F61-64 பிரிவில்
திறமையை வௌிப்படுத்திய பாலித்த பண்டார வெள்ளிப்பதக்கம் வென்றார்.போட்டியில் அவர் 46.84 மீட்டர் தூரத்திற்கு பரிதி எறிந்து பதக்கம் வென்றுள்ளார்.
2026 கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பதக்கப்பட்டியலில் அவுஸ்திரேலியா 35 தங்கங்களுடன் முதலிடத்திலும் கனடா 13 தங்கங்களுடன் 2ஆம் இடத்திலும் நீடிக்கின்றன.
நீச்சல் போட்டிகள் அனைத்தும் நேற்றுடன் நிறைவடைந்தன.
இதில் அவுஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி அதிக தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ளது.
இந்தியா 03 தங்கப்பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 08 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
