சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

by Staff Writer 27-07-2026 | 4:49 PM

COLOMBO (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (27) உத்தரவிட்டார்.

தலா  200 இலட்சம் ரூபா பெறுமதியான 2  சரீரப் பிணைகளில் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன பிரஜையிடமிருந்து 02 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு அமைய மத்திய குற்றப்பிரிவு விசாரணை பணியக அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களை 24 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்திய பின்னர் இன்று(27) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களின் தொலைபேசி அறிக்கைகள், வங்கி அறிக்கைகள், Cryptocurrency கணக்கின் ஊடாக கடந்த காலங்களில் கொடுக்கல் - வாங்கல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக விசாரணை அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.

இதனிடையே கொள்ளுப்பிட்டியில் கொள்ளையிடப்பட்ட 02 கோடி ரூபா பணத்திற்கு உரித்தானவர் என கூறப்படும் சீனப் பிரஜை நாட்டை விட்டு வௌியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.