.webp)
-557786.jpg)
Colombo (News 1st) கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்துடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொம்பனித்தெரு - பார்க் வீதியில் கொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்களிடமிருந்து 2 கோடியே 70 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு - 13 மற்றும் 14 ஐச் சேர்ந்த 54 மற்றும் 59 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
