நெல் கொள்வனவு: 305 மெட்ரிக் தொன் கொள்முதல்

6 நாட்களில் 305 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு: நெல் சந்தைப்படுத்தல் சபை தகவல்

by Staff Writer 18-07-2026 | 2:20 PM

Colombo (News 1st) 6 நாட்களில் 305 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

43 மத்திய நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு இடம்பெற்று வருவதாகக் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டுள்ளார்

அரசாங்கத்தினால் 1 கிலோகிராம் நாடு நெல் 120 ரூபாவிற்கும் 1 கிலோகிராம் சம்பா நெல் 130 ரூபாவிற்கும் மற்றும் 1 கிலோகிராம் கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுகிறது.

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்திற்கு மேலதிகமாக, தனியார் துறையினரும் நிர்ணயிக்கப்பட்ட விலையின் கீழ் நெல்லை கொள்வனவு செய்து வருவதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.