.webp)

Colombo (News 1st) - 11 மாவட்டங்களில் நாளை மறுதினம்(16) முதல் மீண்டும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 68,672 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்தது.
டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
