06 அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட தீர்மானம்

தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் போது இணைந்து செயற்பட 06 கட்சிகள் தீர்மானம்

by Staff Writer 13-07-2026 | 4:18 PM

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 06 கட்சிகள், தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய 06 கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முக்கிய கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஐீவன் தொண்டமான் ஆகியோர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.