.webp)
-557283.jpg)
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் 597 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வருடத்தின் இதுரையான காலப்பகுதியில் 68,672 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு அதி அபாயமிக்க 60 வலயங்களை மையமாகக் கொண்டு இன்று(13) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தை ஒருங்கிணைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நுளம்புக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக சீருடைக்கு மேலதிகமாக மாணவர்கள் தமது கைகளையும் கால்களையும் மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வர அனுமதிக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
