யாழ். மறைமாவட்ட ஆயர் நியமனம்

யாழ். மறைமாவட்ட ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை நியமனம்

by Staff Writer 29-06-2026 | 7:55 PM

Colombo (News 1st) யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் 14ஆம் லியோவினால் புதிய ஆயருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யாழ். மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய ஆயர் தொடர்பான அறிவிப்பு வௌியாகியுள்ளது.

1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை, 2000ஆம் ஆண்டு அருட்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

2020ஆம் ஆண்டு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு திருநிலைப்படுத்தப்பட்டார்.

2024ஆம் ஆண்டு மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை நியமனம் பெற்றிருந்தார்.