.webp)

Colombo (News 1st) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுரேஷ் சலே, இருதய நோய் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே காணப்பட்ட இருதய நோய் நிலைமை தொடர்பான பரிசோதனைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய கண்காணிப்பின் கீழ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
