சிறுமி துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 32 வருட சிறை

சிறுமி துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 32 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 24-06-2026 | 5:28 PM

Colombo (News 1st) 15 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு 32 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அனுராதபுர விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 05 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் இதற்கு மேலதிகமாக 70,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டார்.

2016 ஜூலை மாதம் தம்புத்தேகம பகுதியில் குறித்த துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவித்து, சட்ட மாஅதிபரினால் சந்கேதநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பை அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று(24) அறிவித்தது.