08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna

08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna

by Staff Writer 22-06-2026 | 5:22 PM

Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் கீழ் செயற்படுகின்ற யாழ்ப்பாணம் Fox Resorts 08ஆவது ஆண்டு பூர்த்தியை இன்று(22) கொண்டாடுகின்றது.

யாழ்ப்பாணம் கொக்குவிலிலுள்ள Fox Resorts சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்க்கின்ற அனைத்து வசதிகளையும் கொண்ட ஹோட்டல் கட்டமைப்பாக திகழ்கின்றது.

உள்நாட்டு, வௌிநாட்டு விருந்தினர்களுக்கு சிறந்த விருந்தோம்பலை வழங்குகின்ற Fox Resorts, 2020ஆம் ஆண்டு தெற்காசியாவின் மிகச் சிறந்த மரபுரிமை ஹோட்டலுக்கான சாட்டா விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Fox Resorts-இன் 08ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சர்வமத அனுஷ்டானங்களும் இன்று காலை நடைபெற்றன.

விழாவில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சுரேஷ் ஸ்ரீநிவாசன், Fox Resorts பிரதம நிறைவேற்றதிகாரி Chris Quyn, யாழ்ப்பாணம் Fox Resorts அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.