வெற்றி வரலாற்றுடன் நாடு திரும்பிய ருமேஷ் தரங்க

வெற்றி வரலாற்றுடன் நாடு திரும்பிய ருமேஷ் தரங்க

by Staff Writer 21-06-2026 | 8:53 PM

Colombo (News 1st) டோஹா டயமண்ட் லீக் தொடரில் ஈட்டியெறிதல் போட்டியில் 88 தசம் 6 8 மீற்றர் திறமையை வௌிப்படுத்தி முதலிடம் பிடித்த இலங்கையின் ருமேஷ் தரங்க வெற்றி வரலாற்றுடன் நாடு திரும்பினார். 

ருமேஷ் தரங்க பங்குபற்றிய இரண்டாவது டயமண்ட் லீக் போட்டி இதுவாகும். 

உலகின் மிகசிறந்த மெய்வல்லுனர் வீரர்களுடன் போட்டியிட்டு அவர் வெற்றியை தனதாக்கினார்.

85.99 மீற்றர் திறமையை வௌிப்படுத்திய கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 2ஆம் இடத்தையும்,  அமெரிக்காவின் கர்டிஸ் தொம்சன் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா நான்காம் இடத்தைப் பிடித்தார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற ரோம் போட்டியில் ரூமேஷ் 92.62 மீற்றர் திறமையை வௌிப்படுத்தி சாதனை படைத்தார். 

செக். குடியரசில் நடைபெற்ற ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பிலும் அவர் முதலிடம் பெற்றார் ரு

மேஷ் தரங்க ஆடவருக்கான ஈட்டி எறிதல் சர்வதேச தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.