QR முறைமை நீக்கப்படாது

எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமை நீக்கப்படாது

by Staff Writer 21-06-2026 | 9:04 PM

Colombo (News 1st) எரிபொருள் விநியோகத்தின் போது பயன்படுத்தப்படும் QR முறைமை நீக்கப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருளை தொடர்ந்து சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, தற்போது பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 80.57 டொலராக காணப்படுவதுடன் ஒரு பீப்பாய் WTI மசகு எண்ணெயின் விலை 76. 54 டொலராக பதிவாகியுள்ளது.