பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

by Staff Writer 19-06-2026 | 8:20 PM

Colombo (News 1st) நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் வௌிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சிவப்பு அறிவித்தலை பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இத்தகையோரை கைது செய்வற்கு தேவையான ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் எதிர்காலத்தில் நீல அல்லது சிவப்பு அறிவித்தல் ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்