கைது செய்யப்பட்ட சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

by Staff Writer 19-06-2026 | 8:10 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(18) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி ஆளணிச் செலவீனத்தின் கீழுள்ள நிதியை குற்றவியல் மோசடியாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சுகீஸ்வர பண்டார பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றி அரசாங்கத்திடமிருந்து இரண்டு சம்பளங்களைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்கான சம்பளத்திற்கு மேலதிகமாக சுகீஸ்வர பண்டார திட்டப் பணிப்பாளராகவும் சம்பளம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.