.webp)

Colombo (News 1st) காலிமுகத் திடல் கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று(10) மாலை நீராடச்சென்ற 06 சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் காணாமல் போயிருந்த சிறுவர்களில் ஐவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுதிக்கப்பட்ட, மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 11 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கி காணாமல் போன மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 10 வயதான சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
