சரத் வீரவன்சவிற்கு வெளிநாட்டு பயணத்தடை

விமலின் சகோதரர் சரத் வீரவன்சவிற்கு வெளிநாட்டு பயணத்தடை

by Chandrasekaram Chandravadani 10-06-2026 | 6:38 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவிற்கு இன்று(10) வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 வாகனங்களை தவறாக பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு 09 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஏனைய செய்திகள்