ரயிலில் மோதிய முச்சக்கர வண்டி : இருவர் பலி

ரயிலில் மோதிய முச்சக்கர வண்டி : இருவர் பலி

by Staff Writer 09-06-2026 | 3:28 PM

Colombo (News 1st) கந்தானை - கப்புவத்த ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ரயிலில் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஜாஎல - ஏக்கல பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில் கடவையின் சமிக்ஞை விளக்கு எரிந்து, சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டிருந்த போதிலும் குறித்த முச்சக்கர வண்டி ரயில் கடவையை கடக்க முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சடலங்கள் ராகம போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.