.webp)
-556699.jpg)
Colombo (News 1st) மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஜமைக்கா - கிங்ஸ்டனில் அமைந்துள்ள Sabina Park மைதானத்தில் நேற்றிரவு(03) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்களை பெற்றது.
Pathum Nissanka 79 ஓட்டங்களையும் அணித் தலைவர் Kusal Mendis 74 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
03 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 - 0 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது.
தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2027 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கு இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் இரு அணிகளுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
