Auto மீது மரம் சரிந்து வீழ்ந்ததில் மூவர் பலி

முச்சக்கர வண்டி மீது மரம் சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 04-06-2026 | 10:09 AM

Colombo (News 1st) நாவலப்பிட்டி- மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகிலிருந்த பாரிய மரம் சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று(04) காலை 6.45 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பாடசாலை மாணவன், அவரது தாயார் மற்றும் பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.