.webp)

Colombo (News 1st) அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு Bell TH-57 Sea Ranger ரக 10 ஹெலிகொப்டர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஹெலிகொப்டர்களின் ஊடாக இலங்கை விமானப்படையின் நீண்ட கால நடவடிக்கைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் படையணியை வலுப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் தேவையான தொழில்நுட்பப் பரிசோதனைகளை நிறைவடைந்ததன் பின்னர், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
விமானிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் அனர்த்தங்களின் போது மீட்புப் பணிகள் மற்றும் தேடுதல்களை முன்னெடுப்பதற்கும் பல்வேறு மனிதாபிமானப் பணிகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
