ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

by Staff Writer 31-05-2026 | 6:37 PM

Colombo (News 1st) ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. 

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவ சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாடா ஆகியோர் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

அதற்கமைய கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் கூண்டுகள் அமைக்கப்படவுள்ளன.

மீனவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிகள், முதல்சுற்று வளர்ப்பிற்கான மீன் குஞ்சுகள் மற்றும் மீன்களுக்கான உணவுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.