.webp)

Colombo (News 1st) வெளி உலகத்தை ஒளிரச் செய்வது போலவே இந்த வெசாக் பூரணைக் காலம் நமது இதயங்களிலும் கருணை, இரக்கம் மற்றும் ஞானத்தை ஒளிரச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிக்கிறார்.
குறுகிய குறிக்கோள்களிலிருந்து விலகி, பொதுநலனுக்காக அர்ப்பணித்து, தர்மத்தில் பிரகாசிக்கும் ஒரு நாட்டை உருவாக்குவதற்கு இந்த வெசாக் பண்டிகை ஆசீர்வாதமாகவும் வலிமையாகவும் அமைய வேண்டுமெனவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
