40 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா

40 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா

by Staff Writer 25-05-2026 | 8:08 PM

Colombo (News 1st) 40 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 30 நாட்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இன்று(25) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரம், பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்ததன் பின்னரே குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் நாடுகளில் பிரதானமாக அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், அவுஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் அடங்குகின்றன.