மோட்டார் சைக்கிள் மோதியதில் 72 வயதானவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதியதில் 72 வயதானவர் பலி

by Staff Writer 18-05-2026 | 5:16 PM

Colombo (News 1st) புசல்லாவை நகரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று(17) பிற்பகல் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முயன்ற 72 வயதானவர் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.