ICC பிரதிநிதிகள் - ஜனாதிபதி இடையே சந்திப்பு

ICC பிரதிநிதிகள் - ஜனாதிபதி இடையே சந்திப்பு

by Staff Writer 17-05-2026 | 6:43 PM

Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின்(ICC) பிரதிநிதிகள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை இன்று(17) சந்தித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் உப தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபையின் செயலாளர் தேவஜித் சயிகியா ஆகியோரே இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகக் கடமைகளுக்காக எரான் விக்கிரமரத்ன தலைமையில் 09 பேர் கொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்பு குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை அண்மையில் பதவி விலகியதையடுத்து குறித்த குழு நியமிக்கப்பட்டது.

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.