பரண் உடைந்து வீழ்ந்ததில் பலியான சிறுவன்

பரண் உடைந்து வீழ்ந்ததில் பலியான சிறுவன்

by Staff Writer 17-05-2026 | 6:39 PM

Colombo (News 1st) கம்பளை - அட்டுவாவத்தை பகுதியில் பரண் உடைந்து வீழ்ந்ததில் 03 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொருட்கள் வைப்பதற்காக கூரையோடு இணைக்கப்பட்டிருந்த பரணிலிருந்து நீர்க்குழாயை எடுப்பதற்காக சிறுவனின் தந்தை முயற்சித்துள்ளார்.

இதன்போது அதிலிருந்த பலகை உடைந்ததில் அவர் கீழே இருந்த சிறுவன் மீது வீழ்ந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 03 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகள் கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.