.webp)
-556143.jpg)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் முகாமைத்துவப் பணிகளை
மேற்கொள்வதற்காக நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் கலாசார செயற்பாடுகளின் மையமாகவும் யாழ்ப்பாணத்தின் கலாச்சார மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் போற்றி பேணுவதற்குமான இருதரப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 11 மாடிகளை கொண்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2022.02.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தை பேணிச்செல்வதற்காக கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த கலாசார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுப்பதற்கு ஒருங்கிணைந்த முகாமைத்துவ குழு நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்டம் நிர்மாணம் பூர்த்தியடைந்த பின்னர், இக்கலாசார மத்திய நிலையம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக யாழ். மாநகர சபைக்கு பாரப்படுத்தல் வேண்டும்.
அவ்வாறு பாரப்படுத்தப்பட்ட பின்னர், முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்வதற்காக நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு குறித்த தரப்பினர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளதுடன் அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கை பொறுப்புறுதி வரைபிற்கு சட்ட மாஅதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கான நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
