முன்னாள் ஜனாதிபதி ஹோ சி மின் சிலைக்கு மலரஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய வியட்நாம் ஜனாதிபதி

by Staff Writer 08-05-2026 | 8:24 PM

Colombo (News 1st) வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) கொழும்பு பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள வியட்நாமின் முன்னாள் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு இன்று பிற்பகல் மலரஞ்சலி செலுத்தினார்.  

வியட்நாமின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் முன்னாள் ஜனாதிபதியுமான ஹோ சி மின்னுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வியட்நாம் ஜனாதிபதி ஹுனுபிட்டிய கங்காராம விஹாரைக்கு செல்லவுள்ளதுடன் இலங்கை-வியட்நாம் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா மன்றத்தில் சிறப்புரையும் ஆற்றவுள்ளார்.

நேற்று இரவு இராஜதந்திர விஜயமாக நாட்டை வந்தடைந்த வியட்நாம் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு விழா இன்று காலை ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.