நிலக்கரி கொள்வனவு குறித்த தகவல்களை 22வரை வழங்கலாம்

நிலக்கரி கொள்வனவு குறித்த தகவல்களை 22ஆம் திகதி வரை வழங்கலாம்

by Staff Writer 08-05-2026 | 8:27 PM

Colombo (News 1st) 2009 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற அனைத்து நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரை தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை தகவல்களை தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் வழங்க முடியும்.

நீதவான் நீதிமன்ற வளாகத்தின் 05 ஆவது மாடியிலுள்ள ஆணைக்குழு அலுவலகம், சாஞ்சி ஆராச்சி வத்தை, அதிகரண மாவத்தை, கொழும்பு 12 எனும் முகவரிக்கு தகவல்களை அனுப்ப முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளை ஆணைக்குழுவுடன் இணைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆரம்பித்துள்ளனர்.