.webp)

Colombo (News 1st) இன்று(06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எரிபொருள் விலைகளின் அடிப்படையில் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 545 ரூபாவினாலும் (புதிய விலை 6,245 ரூபா)
5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 220 ரூபாவினாலும் (புதிய விலை 2,500 ரூபா) அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மே மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 4,765 ரூபா
05 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 1,910 ரூபா
2.3 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 890 ரூபா
