.webp)

Colombo (News 1st) கொள்ளுப்பிட்டியில் உள்ள கட்டடமொன்றில் தங்கியிருந்த வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணினி குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் இன்று(06) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 699 ஆக உயர்ந்துள்ளது.
கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கடந்த 04 நாட்களில் மாத்திரம் இராஜகிரிய மற்றும் தலங்கம ஆகிய பகுதிகளில் 157 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
