வெலிக்கடை சிறை கட்டுப்பாட்டாளர்கள் மூவர் கைது

வெலிக்கடை சிறை கைதி உயிரிழப்பு : 03 சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் கைது

by Staff Writer 05-05-2026 | 3:28 PM

Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் போது சுகவீனமுற்ற கைதி நேற்று(04) உயிரிழந்தார்.

பொரளை பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

அண்மையில் மெகசின் சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற தாக்குதலிலும் சிறைச்சாலை கைதி உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை காவலர் மற்றும் சிறை கட்டுப்பாட்டாளர்கள் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.