.webp)

Colombo (News 1st) யாழ்ப்பாணம், கோப்பாய் - பருத்தித்துறை வீதியில் நேற்று(04) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 02 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மதிலில் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய 02 இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
