நாளை முதல் மழையுடனான வானிலை

நாளை முதல் மழையுடனான வானிலை

by Staff Writer 05-05-2026 | 5:36 PM

Colombo (News 1st) நாட்டில் நாளை(06) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.