ஊடகவியலாளர் பிரகீத் : விசாரணைக்கு மேல் நீதிமன்றம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான விசாரணைக்காக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம்

by Staff Writer 03-05-2026 | 4:08 PM

Colombo (News 1st) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவின் தலைமையில் இந்த நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான நயனா செனவிரத்ன, நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகியோர் இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2010 ஜனவரி 24ஆம் திகதி இரவு பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டார்.