.webp)

Colombo (News 1st) புத்தளம் - திருகோணமலை வீதியின் 134ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்களுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் - கப்புகொல்லேவ பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹொரவபொத்தானை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
