பங்களாதேஷுடனான T20 தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி

by Staff Writer 02-05-2026 | 7:17 PM

Colombo (News 1st) பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

இன்றைய மூன்றாவது போட்டி மழை காரணமாக 09 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 87 ஓட்டங்களை பெற்றது.

88 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, 9 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை மகளிர் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்று  3-0 என தொடரை கைப்பற்றியது.