.webp)

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷம்மி சில்வா உள்ளிட்ட நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று(29) முதல் தற்காலிகமாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
