உரும்பிராய் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் - லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 22-04-2026 | 3:06 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோப்பாய், உரும்பிராய் சந்தியில் இன்று(22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பலாலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 மற்றும் 43 வயதான இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

விபத்து தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.