.webp)

Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
25,000 ரூபா பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் சந்தேகநபரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் பிணை இரத்து செய்யப்படுமென அறிவித்துள்ள நீதவான், சந்தேகநபரின் கடவுச்சீட்டை இடைநிறுத்துமாறு அறிவித்தார்.
சந்தேநபரான பிரேமலால் ஜயசேகர தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று(21) நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கைத்துப்பாக்கியை காண்பித்து ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
