.webp)

Colombo (News 1st) உலக சந்தையில் 06 வருடங்களுக்கு பின்னர் மசகு எண்ணெயின் விலை இன்று(18) பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரத்தின்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 9.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.38 அமெரிக்க டொலராக பதிவானது.
அத்துடன், WTI மசகு எண்ணெய் விலை 10.84 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 82.59 அமெரிக்க டொலராக பதிவானது.
